Saturday, November 27, 2010

கோடம்பாக்கம் ஜெரி லூயிஸ்


கோடம்பாக்கம் ஜெரி லூயிஸ்

    


கிட்டத்தட்ட 1000க்கு மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்துள்ள நாகேஷ் கடைசியாக நடித்த படம் தசாவதாரம் உடல் நிலை சரியில்லமால் மருத்துவமனையில் இருந்தபோது கூட ஷுட்டிங் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.நல்ல படத்தில் நடித்த திருப்தியோடு பொகிறேன்என கமலஹாசனிடம் சொல்லிவிட்டு போய் இருக்கிறார்.

ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெரி லூயிஸ் மீது இவருக்கு அளவு கடந்த ஈடுபாடு.தன்னையும் அவ்வாறே தயார்ப் படுத்திக் கொண்டார்.இவரை கோடம்பாக்கம் ஜெரி லூயிஸ் என்று அழைத்துள்ளனர். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்று உள்ளார்(1974).தமிழ்நாடு மாநில விருது(1994) பெற்றுள்ளார்.





தனது சிறுவதில் ஏற்பட்ட சின்னம்மை காரணமாக முகத்தில் தழும்புகள் ஏற்பட்டன.தன்னால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என மிகவும் கவலைப்பட்டுள்ளார்.அந்த வேதனைகளைத் தான் “சர்வர் சுந்தரம்படத்தில் தத்ரூபமாகக் காட்டியிருப்பார்.

மூன்று தலைமுறை நடிகர்களோடு நடித்த பெருமை கொண்டவர்.கருப்பு வெள்ளை சினிமா முதல் இன்று வரை உள்ள நடிகர்களூக்கும் கதைக்கேற்ப தன்னை மாற்றி நடிக்கத் தெரிந்தவர்.நிஜ மனிதர்களைப் பார்த்து நடிக்கப் பழகியவர்.

 கடந்த ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி அனைவரையும் சிரிக்க வைத்த நாகேஷ் என்னும் மகா நடிகர் தனது மூச்சை நிறுத்திவிட்டார்.தமிழ் திரைவயுலகமும்,அரசியல் உலகமும் திரண்டு அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.





குண்டுராவ் என்னும் பெயருடன் மைசூரில் பிறந்து,தாராபுரத்தில் பெற்றோருடன் வாழ்ந்து,கோவையில் படித்து,சென்னை ரயில்வேயில் குமாஸ்தா வேலையில் அமர்ந்தார். சுருக்கமான அவரது வாழ்க்கை பயணம் இது தான்.

நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால், நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.1959ம் ஆண்டு தாமரைக்குளம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நீர்க்குமிழி,சர்வர் சுந்தரம்,எதிர் நீச்சல் போன்ற படங்கள் நாகேஸை வெறு ஒரு பரிமாந்த்திற்கு எடுத்துச் சென்றது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி,காதல் மன்னன் ஜெமினி கணேசன் போன்றவர்கள் நாகேஷின் வரவுக்காகக் காத்திருந்த காலங்கள் உண்டு.1960-1070 களில் கொடி கட்டி பறந்தவர்.

இவர் மீது நடிகர் கமலஹாசனுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு.

சிரிக்க வைத்த இந்த நாயகனை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

               



தனா

1 comment:

Cable சங்கர் said...

நல்ல முயற்சி தனா. இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்.

Post a Comment