Thursday, November 25, 2010

எந்திரனும் சில போஸ்மார்டம் ரிப்போர்ட்டுகளூம்…

எந்திரன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் பல ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியின்மை இருக்கிறது. வழக்கமான ரஜினியின் பஞ்ச் டயலாக், டாஷிங் ஓப்பனிங், லாஜிக் மீறின சண்டை காட்சிகள், என்று ஒரு ரஜினி ஓப்பனிங் சீன் கூட இல்லாமல் ரஜினி படம் செரிக்காமல் இருக்கிறது தீவிர ரஜினி ரசிகர்களுக்கு என்று ஒரு பக்கம் கருத்துக்கள் எழத்தான் செய்கிறது. ஆனால் என்னை போன்ற ஒரு சினிமா ரசிகர்களுக்கும், குழந்தைகளுக்கும்  இந்த ரஜினி பிடித்திருப்பது நிஜம்.

என் இரண்டாவது பையன் எந்திரன் படம் பார்த்துவிட்டு சிட்டியோடு ஒன்ற ஆரம்பித்துவிட்டான். கிராபிக்ஸையெல்லாம் சந்தோஷமாய் கண்டு களித்தவன். கடைசியில் மூட் அவுட். சிட்டி தன்னை டிஸ்மேண்டல் செய்யும் காட்சியில் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டான். இப்படத்தை பற்றி பலர் ஜெட்டிக்ஸ் சேனலில் வரும் கதை, கார்டூன் படம், என்றெல்லாம் கூட சொல்கிறார்கள். ஆனால் நிஜமாகவே அவர்களை கவரும் வகையில் படமெடுப்பது மிகவும் கஷ்டம்.

அடுத்த குற்றச்சாட்டு, படம் சயின்ஸ்பிக்‌ஷனாகவும் இல்லாமல், மசாலாத்தனமாய் இருக்கிறதென்று. நம்ம ஆளூங்களுக்கு ஒரு பார்ஷியாலிட்டி உண்டு. அது என்னவென்றால், வெள்ளைக்காரன் சூப்பர், நாம் செய்தால் அது மொக்கை. ஜேம்ஸ்பாண்ட் தன்னுடய படங்களில் இடுப்பு பெல்டிலிருந்து ஒரு டிரிக்கரை அழுத்தினால் எதிரி குண்டடித்து செத்துப்போவான் என்றால் நம்புவார்கள். மச்சான் ஜேம்ஸ்பாண்ட் இடுப்பு பெல்ட்டுல ஒரு துப்பாக்கி வச்சிருக்காண்டா.. என்பவர்கள், கமல் விக்ரமில் ஒரு லாக்கரை திறப்பதற்கு ஒரு சின்ன கைகடிகாரத்தை மினி பாம் எக்ஸ்போடராக மாற்றி வெடிக்க வைத்து திறப்பார். அதை “த..பாருடா.. இவரு கைல வாச்சுலேர்ந்து ஒரு ஆண்டனா இழுப்பாராம்.. அதை வச்சு வெடிக்க வைப்பாராம். நல்லா உடறாண்டா ரீலு “ என்பார்கள். இம்மாதிரியான உரையாடல்களுக்கு இது ஒரு உதாரணமே.. இது போல பல விஷயஙக்ள் இருக்கிறது.
 enthiran` அது போலத்தான் எந்திரனும், வெளிநாட்டு படங்களில் ஒரு ஜெனர் படங்கள் என்றால் கதை அதற்குள்ளேயே சுற்றி வரும் நம் தமிழ் படங்களை போல தலை வாழை இலை போட்டு, காதல், பாட்டு, செண்டிமெண்ட், காமெடி, செக்ஸ் என்று எல்லாவற்றையும் கலந்து கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை.  அந்த வகையில் பார்த்தால் எந்திரன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வுதான். ஏனென்றால் தமிழ்ல் எம்.ஜி.ஆர். பிட்டு கேரக்டரில் நடித்த ஒரு பழம் பெரும் தமிழ் திரைப்படத்தில் வெளிகிரகத்திலிருந்து ப்றக்கும் தட்டிலிருந்து இறங்கும் மனிதர்களை பற்றி ஒரு படம் எடுத்தாக கேள்விபட்டதுண்டு.  பின்ன்அரும் ஆங்காங்கே ஒரு சில படங்கள் அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல் சில படங்கள் வந்திருந்தாலும், முழுவதும் சயின்ஸ்பிக்‌ஷனாக ஒரு தமிழ் படம் உலக அளவில் ஹாலிவுட் தரத்திற்கு ஒரு குவாலிட்டியான அனிமேஷன், சிஜியுடன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
ரஜினிக்கும் அவருடய திரையுலக வாழ்க்கையில் இப்படம்  மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ரஜினி என்கிற கரிஷ்மாவை மீறி ரஜினி என்கிற நடிகனை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.

எந்திரன் ஒரு Half Baked மசாலா சயின்ஸ்பிக்‌ஷன் என்பவர்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். ஹாலிவுட் சயின்ஸ்பிக்‌ஷன் மசாலாக்களுக்கு இது ஒன்றும் குறைவில்லை. நிச்சயம் இப்படத்தை ஒரு முகம் தெரியாத அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு ஹீரோவை வைத்து ஹாலிவுட்டில் படமெடுத்து ஹிட்டடித்திருப்பார்கள். ஆனால் அதே விஷயத்தை இங்கே மக்களுக்கு கொண்டு செல்ல ஒரு கமலோ, ரஜினியோ தேவை. இது ஒரு ஆரம்பம் தான். நிச்சயம் இப்படத்தின் வெற்றி மேலும் சிறந்த சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை தமிழ் திரையுலகுக்கும் கொடுக்குமென்ற நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

தனா

1 comment:

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் தனா.. பதிவுலகம் உங்களை வருக.. வருகவென வரவேற்கிறது.

Post a Comment